“தமிழரின் பாரம்பரிய உணவு முறையின் முக்கியத்துவத்தை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ளுதல்.”
Date: 30/06/2025 Day: Monday
Event Name: “வாழை இலையின் முக்கியத்துவம்”
Content:
“தமிழரின் பாரம்பரிய உணவு முறையின் முக்கியத்துவத்தை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ளுதல்.”
இன்று ஜூன் மாதம் 30 ஆம் நாள், திங்கட்கிழமை மூன்றாம் வகுப்பு “அ“ பிரிவில் படிக்கும் மாணவர்கள், வாழை இலையின் பயன்கள் மற்றும் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தனர்.
வாழை இலையில் இன்று மதியம் உணவருந்தினர். மேலும் வாழை இலையின் பயன்கள் அதில் எவ்வாறு உண்ண வேண்டும், நாம் பாரம்பரியமாக, ஏன் வாழை இலையில் உணவு அருந்த வேண்டும் என்ற விவரங்களை அந்த பிரிவில் உள்ள தமிழ் ஆசிரியை திருமதி. செந்தாமரை அவர்கள், அனைத்து குழந்தைகளுக்கும் எடுத்துரைத்தார்.
குழந்தைகளும், வாழை இலையின் மற்றும் மரத்தின் பயன்களையும், அதன் சிறப்புகளையும், உன்னிப்பாக கவனித்து, வாழை இலையில் மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வு வகுப்பில் மிகச்சிறந்த நேர்மறை எண்ணத்தை உருவாக்கி குழந்தைகளுக்கு கற்றல் திறனையும் வளர்த்த்தது.
2023 senthil matric school Dharmapuri. all rights reserved. designed by aatmia.